Sunday, April 28, 2013



காற்றில் ஆடும்  கதவுகள்  !!

போகும் வரை ......

SFO  "கோல்டன் கேட்" 
போட்டோ 
கனவு .....

நயாகரா 
முன் நிற்க 
வாழ்க்கை லட்சியம்...

கழுத்து காது 
மூடி 
பனிக்கட்டியில் சறுக்கி 
"Live  in " அப்டேட் ....

சென்று சில நாட்களுக்கு பின் .... 

"miss மை சென்னை   !!"

"மதுரை parotta ...yummy "

"அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!"

ஹோம் made  "இட்லி சாம்பார் " போட்டோ ...

...  

Saturday, April 27, 2013


தேவை ஓர்  Undo பட்டன்  !!

இன்று ...

800 சதுர அடி புறா கூண்டும்  
ஒரு hatchback உம்  
உன் பெயரில் ...
அதுவும் EMI யில் ....

இலவசமாக
வளமான தொப்பையும் ..... 

இதற்காக ...

பழைய 
நண்பர்கள் பல 
தொலைத்தாய் .....

உறவினர் 
எல்லாம் 
மறந்தாய்....

java  வுடன் 
மட்டும் குடும்பம் 
நடத்தினாய் ....

'Undo' 
பட்டன் இல்லாத 
வாழ்க்கையில் .....

அடுத்த நாளுக்காக 
தினம் தினம் 
திட்டமிட்டு 

நீ .....
தினமும் 
மறக்கிறாய் 
உன் 
"இன்று" ஐ .....

  


Saturday, April 7, 2012

'பவன்'கள்

தான்
வாங்க நினைக்கும்
புத்தகம் துறந்து
மகளுக்காக
Barbie பொம்மை வாங்கி
கொடுப்'பவன்' ....


லோ மாடல் மொபைல்
வாங்கி தன்
மனைவிக்கு நகை
போட்டு அழகு
பார்ப்'பவன்'.....

வயதான பெற்றோர்
சுற்றுலா செல்ல
தன் தவனை A/C
கனவை தள்ளி
போடு'பவன்'...

இப்படி பல
'பவன்' களால் தான்
இந்த உலகில் குடும்பங்கள்
பிழைகின்றன !!

இறைவனும் KFCயும்

2 வயது மகளின்
சிரிப்பில் இறைவனை
காண்கிறேன்...

இறைவன் என்னிடம்
'KFC போலாமா ?'
என்கிறது ....

மாறும்..ஆனால் மாறாது

நான்
சரியாக சாப்பிடுவது
இல்லை ..
இது அம்மாவின் கவலை ...

தனியாக
பேச நேரம் ஒதுக்குவது
இல்லை ..
இது மனைவியின் கவலை ...

இந்த வாரமாவது
அப்பா 'Toy Shop' அழைத்து செல்வாரா ?
இது மகளின் கவலை ...

பருவங்கள்
மாறினாலும்
பெண்கள்
கவலைகள்
மாறுகின்றன ..
மறைவதில்லை !!

Search Inprogress !!

இணையத்தில்
ஆங்கில படங்கள் டவுன்லோட்
செய்யும்போது
நம்
முதல் ஷோ திரைப்படங்கள் வரிசை
'Pop up' ஆகிறது ....


PSP இல்
ஞாபகம் வருகிறது
குச்சி வைத்து
தெருவில் ஆடிய one side கிரிக்கெட் ..


FB இல்
இலக்கு இல்லாமல்
அலையும் பொது
மனதில் மின்னலடிகிறது
நம் குட்டிசுவர்
கதைகள்...

இன்று
நீ Dollar களில் வீடு
வாங்கி இருக்கலாம்

மேலே
முடி தொலைத்து
கீழே
தொப்பை சேர்த்து
சில பல
குழந்தைகளுக்கு தந்தை
ஆகி இருக்கலாம்..

கால
சுழலில் சிக்கி தொலைந்து போன
நண்பனே ...
திசை ஏதேனும் ஒன்றில் நீ இருப்பாய் என
இன்றும் வலைதளங்களில் தேடுகிறேன் ...
சில மந்தமான மதியான பொழுதுகளில் .....

கண்ணாடி படிகட்டுகள் ..

அன்று -

பதினெட்டுகளில்
கண்ணாடியுடன் காதல் ...
என்னை தினமும்
அழகாக காட்டியதால் ....


இன்று -

FB உடன் காதல் ..
என் பதினெட்டு வயது
Profile படம் ....
நான் இப்போது முப்பதுகளில் !!

பின் குறிப்பு : இப்போதெல்லாம் கண்ணாடி பார்ப்பது பிடிக்கவில்லை...